Saturday, May 9, 2009

நீயா பாரதி நீயா?


ஓங்கி விழுந்த அறையால் எழுந்தேன்;
நீயா பாரதி நீயா? - திக்கினேன்.
நீ தான் செத்துப் போனாயே? ...
எனக்கேதடா சாவு?
இயேசு சிலுவையில் மாண்டான்,
ராமன் சரயு நதியில் தற்கொலை செய்துகொண்டான்,
கண்ணன் அம்பு பட்டு செத்தான்;
எனக்கு சாவே இல்லை. (நன்றி-பாரதி)
கர்ஜித்தான் அந்த கந்தகக் கவி.
ஏன் இப்படி திடீரென்று? ...
நெஞ்சு பொறுக்கவில்லை உங்கள் நீசத்தனம் கண்டு,
ஈழம் என்றால் உங்களுக்கு கள்ளக்காதலோ?
புலிகள் என்றால் உங்களுக்கு எட்டிக்கசப்போ?
இசை பாடி ஈழம் மலருமா? மடையர்களே
அடிபட்டவன் ஆயுதம் தாங்கினால் அது அதர்மமா?
போடச்சொல் ஆயுதங்களை, உங்கள் மாடனையும் காடனையும்
கருமாரியையும் பிறகு பார்க்கலாம் புலிகளை.
ரத்த ஒழுக்கு தொடரும்போதும் நிறுத்தாத
வேசித்தனம் அரசியலோடு நிற்கட்டும்,
எழுந்திரு! ஈழம் காக்க குரல் கொடு!
நானும் ஈழத் தலைவனும் வேறு வேறு அல்ல,
என் பாட்டும், அவன் தோட்டாவும் நிகரானவையே.
முடிந்தால் குரல் கொடு,
இல்லாவிட்டால் தமிழ் பேசுவதையாவது
நிறுத்தி விடு.
ஆத்திரத்தில் பாரதி மூர்ச்சையானான்.
நான் விட்டு விட்ட தூக்கத்தை தொடரலானேன்.